Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது” - முதலமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநர் ரவி பதில் கடிதம்!

09:01 PM Mar 17, 2024 IST | Web Editor
Advertisement

பொன்முடிக்கு பதவியேற்பு விழா நடத்த முடியாது என ஆளுநர் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். 

Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொன்முடியை மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதினார்.

தற்போது இந்த கடிதத்திற்கு பதில் கடிதத்தை ஆளுநர் ரவி முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார். அதில் தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் பெற்ற பொன்முடிக்கு பதவியேற்பு விழாவை நடத்த முடியாது என தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொன்முடி மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
DMKgovernerLetterMK StalinPonmudyRN RaviSupreme courtTN Govt
Advertisement
Next Article