பொங்கல் சிறப்பு தொகுப்பு - டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்!
பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு.!
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக இன்று (ஜன.7) முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இன்று முதல் ஜன.9 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். மேலும், ஜன.10 ஆம் தேதி முதல் ஜன.13 ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, பொங்கல் தொகுப்பை 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.