பொங்கல் பண்டிகை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்!
பொங்கல் திருநாளையொட்டி, ஜனவரி 19 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர்களில் பணிபுரிவோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்கள் எந்தவித சிரமமின்றி பயணிக்கும்வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் நேற்று முன்தினம் (ஜன. 10) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், நேற்று (ஜன. 11) ஒரே நாள் மட்டும் 4,107 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. ஜன. 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்கள் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 2 நாள் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக 4,13,215 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,015 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,107 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்கள் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
மேலும் 2 நாட்கள் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக 4,13,215 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.