Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகளின் தேதி மாற்றம்!

08:01 AM Mar 31, 2024 IST | Web Editor
Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.  இந்த நிலையில், பாலிடெக்னிக் தேர்வுகளின் (பட்டயத் தேர்வுகள்) தேதிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அரசு, அரசு உதவிபெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10 மற்றும் 12-ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.  அதாவது, ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு 24 ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதியிலும் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Tags :
Exam date ChangeExaminationpolytechnicramalanstudents
Advertisement
Next Article