Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொள்ளாச்சி பலூன் திருவிழா துவக்கம் | ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்...!

08:41 AM Jan 13, 2024 IST | Web Editor
Advertisement

பொள்ளாச்சியில் நேற்று ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா துவங்கியது.  

Advertisement

பலூன்கள் வெளிநாடுகளில் மட்டுமே பறக்க விடப்பட்ட நிலையில் கடந்த எட்டு
ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் பறக்க விடப்படுகிறது.

இந்த ஆண்டு ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழாவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி,
நெதர்லாந்து, வியட்னாம், என எட்டு நாடுகளில் இருந்து 11 பலூன்கள்
வரவழைக்கப்பட்டு. பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து வானில் பறக்க
விடப்பட்டது. இந்த ராட்சத பலூனில் வெப்ப காற்றை நிரப்பி அதை அதற்கென பிரத்யேக
பைலெட்டுகளை கொண்டு வானில் பொள்ளாச்சியை சுற்றி வட்டமடித்து பறந்தது.

இந்த வெப்ப காற்று பலூனில் பறக்க கடந்த எட்டு ஆண்டுகளும் பொதுமக்களுக்கு அனுமதி
வழங்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பது
வருத்தமளிக்கும் விதமாக உள்ளதாக பலூன் திருவிழாவை கான வந்த பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் மாலை வேளையில் இந்த வெப்ப காற்று பலூனில் 100அடி உயரம்
வரை பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நபருக்கு 1600 ரூபாய் வரை
கட்டணம் நிர்ணயித்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 13ஆம்
தேதி முதல் 16ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை நாட்களில் நடக்கும் பலூன்
திருவிழாவை கான பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement
Next Article