Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்ரம் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் - தள்ளிப் போனது துருவ நட்சத்திரம் ரிலீஸ்!

11:57 AM Nov 24, 2023 IST | Web Editor
Advertisement

விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது.

Advertisement

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.  இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று (நவம்பர் 24) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.  ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்:  ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170” படப்பிடிப்பு – வைரலாகும் கமல் – ரஜினி புகைப்படம்!

காரணம், சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ரூ.2.40 கோடியை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கௌதம் வாசுதேவ் மேனன் பெற்றதாகவும் ஆனால்,  அப்படத்தை அவர் முடிக்கவில்லை என்று பங்குதாரர் வழக்கு தொடர்ந்தார்.  இதனால், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் என்று துருவ நட்சத்திரம் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த நிலையில், அத்தொகையை வழங்கததால் திரைப்படம்  வெளியாவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மறுவெளியீட்டுத் தேதி மீண்டும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Actor vikramDhruva NatchathiramGowtham Vasudev Menonnews7 tamilNews7 Tamil UpdatesReleasevikram
Advertisement
Next Article