நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சை பேச்சு : டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை பெருங்குடியில் கடந்த 17 ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாமல் தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்து வருகிறார் என்று சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் பேசியது சமூகவலைத்தள பக்கங்களில் வைரலானது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஏரல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மேலும் கவிஞர் இனியவனின் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல திமுக பேச்சாளர் இனியவனின் பேச்சால் தமிழ்நாடு பாஜக தொண்டர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.