பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு புதிய பொறுப்பு - ராமதாஸ்..!
பாமக வில் ராமராஸ் மற்று அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சி போட்டி நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையமானது அன்புமணித் தரப்பு பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும், அவர் தான் கட்சியின் தலைவர் என்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதாக, வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். இதனை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு பாமகவினர் டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து இது குறித்து புகார் செய்தனர்.
இந்த நிலையில் இன்று பாமக கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”மாநில இணைப் பொதுச் செயலாளர் இரா.அருள் எம்.எல்.ஏ., அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக இன்று முதல் (21.09.2025) நியமனம் செய்யப்படுகிறார். அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடக நண்பர்கள் கட்சி சார்ந்த தகவல்களுக்கு இவரோடு தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இவருக்கு நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.