Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாமக சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு - விழுப்புரத்தில் 34 மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பாமக சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாட்டையொட்டி புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவு...
02:24 PM May 10, 2025 IST | Web Editor
பாமக சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாட்டையொட்டி புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவு...
Advertisement

பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், அந்த இடத்தில் மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாநாட்டு நேரம் நெருங்கி வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநாட்டை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 34 மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரத்திலுள்ள 9 கடைகள், கண்டாச்சிபுரத்தில் 5, திண்டிவனத்தில் 11, மரக்காணத்தில் 2, செஞ்சியில் 4, விக்கிரவாண்டியில் உள்ள 6 கடைகள் என மொத்தமாக 34 மதுபானக்கடைகள் நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் நாளை நண்பகல் 1 மணி முதல் அனைத்து சாரயம், கள்ளு, மதுபானக் கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் மதுபானம் வழங்கும் விடுதி ஆகியவை அனைத்தையும் மூடுமாறும் கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement
Next Article