விண்ணில் பாய்ந்தது PSLV C58! சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி58, ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.10 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.
இதையும் படியுங்கள் : 2023-ல் விஜய் மக்கள் இயக்கம் செய்த பணிகள் என்னென்ன..?
இந்த செயற்கோள்கள் விண்ணில் உள்ள தூசு, நிற மாலை, வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை எக்ஸ்போ சாட் ஆராய்ச்சி செய்ய உள்ளது. திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைகக்கோளும் ஏவப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்ட மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க உள்ளது. PSLV-C58 ராக்கெட் செயற்கைக்கோளை 6 டிகிரி சாய்வுடன் 650 கி.மீ. சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியது.
இதனிடையே, பழவேற்காடு மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.