Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி - இன்று முதல் துவக்கம்!

09:11 AM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல் துவங்க உள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு  வரும் 25 ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்வுகள் முடிவடைந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அதற்கான தேதிகளையும்  சமீபத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக  அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளதாவது..

”  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த பின் தேர்வுத்தாள்கள், விடைத்தாள்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி மண்டலத்திற்கு கொண்டு வரப்பட்டு  முதன்மை விடைத்தாள் திருத்தும் அலுவலர், கூர்நோக்கு அலுவலர் சோதனை அடிப்படையில் ஏப்ரல் 1 ஆம் தேதி பரிசோதனை செய்த பின், விடைத்தாள்கள் திருத்தும் பணியினை ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் மேற்கொள்வர்” என தெரிவித்தது.

அதன்படி  மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது மதிப்பீட்டு முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. இதையடுத்து மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று முதல் தொடங்கி ஏப்ரல் 13- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுவர்.

தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 6-இல் வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
+2+2 Examanswer sheetexamPlus 2TN +2 Exam
Advertisement
Next Article