Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிளஸ் 1 ரிசல்ட்... மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை எப்போது பார்க்கலாம்?

பிளஸ் 1 மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை எப்போது பார்க்கலாம் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
11:20 AM May 16, 2025 IST | Web Editor
பிளஸ் 1 மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை எப்போது பார்க்கலாம் என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
Advertisement

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8.08 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியானது. அதில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே இன்று (மே 16) வெளியானது. இத்தேர்வை 8,71,239 பேர் எழுதிய நிலையில் 8,17,261 (93.80%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,07,098 மாணவர்கள் எழுதிய நிலையில் அதில் 7,43,232 (92.09%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவியர் 4,03,949 (95.13 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,39,283 (88.70 %) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.43 % மாணவியர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை பிற்பகல் 2மணிக்கு இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

அரியலூர் – 97.76%
ஈரோடு – 96.97%
விருதுநகர் – 96.23%
கோயம்புத்தூர் – 95.77%
தூத்துக்குடி – 95.07%

 

Tags :
11th resultexam resultsnews7 tamilNews7 Tamil UpdatesPublic ExamResultsSchool Educationtn results
Advertisement
Next Article