'தயவுசெய்து மதியம் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம்' - வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்த Zomato!...
மதியம் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என ஆன்லைன் உணவு விநியோக தளமான Zomato வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் கடுமையான வெப்பச் சலனம் நீடிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பலர் உயிரிழந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக சில மாநிலங்களில் கடந்த ஆண்டுகளை விட அதிக வெப்பம் பதிவாகி வெப்ப அலை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.
பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் வெயிலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். ஐஎம்டி முன்னறிவிப்பின்படி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை தொடரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதியம் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என ஆன்லைன் உணவு விநியோக தளமான Zomato வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலையில் இருந்து தனது டெலிவரி கூட்டாளிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.