"புதிதாக 400 கிளைகள் திறக்க திட்டம்" - SBI தலைவர் தினேஷ் காரா பேட்டி
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 கிளைகளைத் திறக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ளது. இந்த வங்கி நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. இதனிடையே, ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் 137 கிளைகளைத் திறந்தது. அதில் 59 புதிய கிராமப்புற கிளைகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், நெட்வொர்க் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 கிளைகளைத் திறக்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளதாவது, "89 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகளும், 98 சதவீத பரிவர்த்தனைகளும் கிளைக்கு வெளியே நடக்கிறது, இனியும் கிளை தேவையா என்று என்னிடம் ஒருவர் கேட்டார். எனது பதில் ஆம். புதிய பகுதிகள் உருவாகி வருவதால் இது இன்னும் தேவைப்படுகிறது.