Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பேக்கரியில் வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் - வாடிக்கையாளர் அதிர்ச்சி!

01:16 PM Jan 01, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பூர் பேக்கரி ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

திருப்பூர் மாவட்டம்,  மடத்துக்குளம் அடுத்த கணியூரில் டேஸ்டி பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்  பேக்கரி செயல்பட்டு வருகிறது. இப்பேக்கரிக்கு,  தினசரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில்,  கடத்தூரை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது இரண்டு
குழந்தைகளுடன்  பேக்கரிக்கு சென்றுள்ளனர்.  புட்டிங் கேக் இரண்டு ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர்.  கேக் வந்தவுடன் சிறுவர்கள் அதனை எடுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அப்பொழுது கேக்கில் ஏதோ ஒன்று கருப்பு நிறத்தில் இருப்பதைக் கண்ட பெற்றோர் கேக்கை வாங்கி பார்த்த பொழுது, நடுவில் செய்தித்தாள் துண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அந்த செய்தித்தாள் கேக் தயார் செய்யும் பொழுது உள்ளேயே இருந்து வெந்து
உள்ளதையும் கண்டு பேக்கரி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால்,  அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

உணவு பாதுகாப்புத் துறையினர் இந்த பேக்கரியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்  என அங்கிருந்த  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
#Bakerycustomersfood safetyKaniyurNews7Tamilnews7TamilUpdatesTiruppur
Advertisement
Next Article