இத்தாலி பிரதமருடன் இருந்த புகைபடம் | #ElonMusk விளக்கம்!
இத்தாலி பிரதமருடன் எலான் மஸ்க் இருந்த புகைப்படத்திற்கு நாங்கள் டேட்டிங் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் நியூயார்க்கில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் TESLA நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் கலந்து கொண்டார். மேலும், இந்த விழாவில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பங்கேற்றார்.
அப்போது, குளோபல் சிட்டிசன் விருதை எலான் மஸ்க் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனுக்கு வழங்கினார்.
அப்போது, எலான் மஸ்க் கூறியதாவது ; "இத்தாலியின் பிரதமராக இருக்கும் ஜியோர்ஜியா மெலோனி மிகவும் சிறந்த முறையில் பணியைச் செய்து வருகிறார். ஜியோர்ஜியா மெலோனி திறமையானவர் மற்றும் மிகவும் அழகானவர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விருதை பெற்றுக் கொண்ட ஜியோர்ஜியா மெலோனி பேசியதாவது ; " குளோபல் சிட்டிசன் விருது வழங்கியதற்கு நன்றி. எலான் மஸ்க் மிகவும் நேர்மையானவர், உணைமையானவர்"இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : Crime | ரூ. 25 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் கடத்தல்… குற்றவாளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்காத திருத்தணி காவல்துறை… காரணம் என்ன?
இந்நிலையில், இந்த விழாவில் TESLA நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனின் புகைபடம் இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த புகைபடத்தை பற்றி பலர் சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர், "அவர்கள் டேட்டிங் செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, TESLA நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் அந்த நபரின் பதிவின் கீழ், " டேட்டிங் செய்யவில்லை" என்று பதிலளித்தார்.