Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'Petta Rap is Back' - பேட்ட ராப் ரீமிக்ஸ் பாடல் வெளியானது!

04:52 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் பிரபுதேவாவின் பேட்ட ராப் திரைப்படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ள பேட்ட ராப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜயின் நடிப்பில் வெளியான ‘கோட்’ திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

தற்போது, மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’ .  அதேநேரம், நாயகனாக  ‘மூன் வாக்’ திரைப்படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார்.  ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார்.  புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

மேலும், விவேக் பிரசன்னா,  பகவதி பெருமாள்,  ரமேஷ் திலக்,  கலாபவன் ஷாஜோன்,  மைம் கோபி,  ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். ‘பேட்ட ராப்’ டீசரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ள பேட்ட ராப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags :
movie updatenews7 tamilPetta RapPetta Rap is BackPrabhu DeveRemix Songtamil cinemaVedhika
Advertisement
Next Article