“பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 மட்டும் குறைத்ததற்கு குறைக்காமலே இருந்திருக்கலாம்!” - பொதுமக்கள் கருத்து!
10:40 AM Mar 15, 2024 IST
|
Web Editor
பெட்ரோல், டீசல் விலை குறைவு குறித்து பொதுமக்கள் கருத்துகள் பின்வருமாறு:
Advertisement
பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 மட்டும் குறைத்ததற்கு குறைக்காமலே இருந்திருக்கலாம் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
Advertisement
பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு வருடங்களாக மாற்றமின்றி இருந்த வந்து நிலையில் இன்று காலை 6.00 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ரூ.2-ஐ குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இரண்டு வருடங்களாக சென்னையில் பெட்ரோல் 102.73 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 100.73 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் ரூ.94.33-ஆக இருந்த நிலையில் இன்று முதல் இரண்டு ரூபாய் குறைந்து 92.33 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 மட்டும் குறைத்ததற்கு குறைக்காமலே இருந்திருக்கலாம்.
- பெட்ரோல், டீசல் விலை ஏற்றும் பொழுது மட்டும் 10 மற்றும் 5 ரூபாய் என விலை உயர்த்துகின்றனர்.
- விலை குறைக்கும் போது மட்டும் 1 ரூபாய் 2 ரூபாய் என குறைக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை.
- குறிப்பாக தேர்தலுக்காக இந்த விலை குறைப்பு நடைபெற்றுள்ளது.
- விலை குறைப்பு என்றால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை குறைத்து இருந்தால் பொதுமக்கள் பயன்பெற்று இருப்பார்கள்
- தேர்தல் வரை தான் இந்த விலை நீடிக்கும், தேர்தலுக்குப் பிறகு பழைய விலையை கொண்டுவருவார்கள்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து கேஸ் விலை அண்மையில் ரூ.100 குறைக்கப்பட்டதற்கு கேட்டதற்கு மக்கள் தெரிவித்த கருத்து பின்வருமாறு:
- 400 ரூபாய் இருந்த கேஸ் விலையை 1000 ரூபாய் ஏத்தி விட்டு 100 ரூபாய் குறைத்தால் என்ன பயன் இருக்கிறது? இதனை எல்லாம் பழைய விலைக்கு கொண்டு வரச் சொல்லுங்கள்.
- தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள இந்த விலைக்குறைப்பை மக்கள் நம்ப கூடாது.
Next Article