Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பானை சின்னம் கோரி விசிக மனு - இன்றே முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை!

04:16 PM Mar 27, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் பானை சின்னம் ஒதுக்க கோரி விசிக தொடர்ந்த வழக்கில் இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஏற்கெனவே கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பானை சின்னத்தில் போட்டியிட்டு விசிக வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். இதனால் இந்த முறையும் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், இந்த கோரிக்கை மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அதனை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்றே முடிவு எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டிருந்த மனுவிற்கு பதிலாக, புதிய மனுவை தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Delhi high courtELECTION COMMISSION OF INDIAElection2024Lok sabha Election 2024thirumavalavanVCK
Advertisement
Next Article