Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பதிவாகும் வாக்குகளை 100% ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்ட உத்தரவிடக்கோரிய மனு - உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்!

04:50 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100% ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிடக் கோரிய மனுவை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertisement

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 100% ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்துவமானவை அவற்றில் முறைகேடு நடத்த முடியாது. அதே போல ஒப்புகை சீட்டிலும் முறைகேடு நடத்த முடியாது.  கையால் எண்ணும் போது வரும் வெகுசில மனித பிழையை மறுக்க முடியாது,  ஆனால் அதுவும் மிக மிக குறைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மின்னணு வாக்குச்சீட்டில் பார்கோடுகளை வைக்கலாமே,  அது தொடர்பாக ஏற்கனவே கூறியுள்ளோம்.  பார்கோடுகள் மிகவும் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. காகித வாக்குச் சீட்டு (paper ballot) முறையில் பெரிய குறைபாடுகள் உள்ளன, தற்போது அதனை குறித்து நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை, அது இயலாத ஒன்று என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் வாக்கு பதிவுவாகும் போது மட்டும் கண்ணாடி வழியாக பார்ப்பதற்கு என்று எரியும் விளக்கு நிரந்தரமாக எரிவது தொடர்பாக பரிசீலனை செய்ய வேண்டும்.  மேலும் ஒப்புகை சீட்டானது எந்திரத்தில் உள்ள கண்ணாடி தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒப்புகை சீட்டு இயந்ரத்தில் ஒளி ஊடுருவும் வகையில் தெளிவான கண்ணாடி இருக்கிறதா? அல்லது பல்ப் இருக்கிறதா? என்பதை விடுங்கள்.  ஆனால் வாக்களிக்கும் ஒவ்வொரு முறையும் கட்டுப்பாட்டு அலகு மூலம் வாக்கு பதிவு ஆகிறது.  அது அதிகாரியால் சரிபார்க்கப்படுகிறது.


எனவே எல்லாவற்றையும் சந்தேகிக்க முடியாது.  நீங்கள் எல்லாவற்றையும் விமர்சிக்கவும் முடியாது.  ஒரு விவகாரத்தில் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  மேலும் சில விசயங்களில் புதிய ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டால்,  அது நடைமுறை ஆகும் வரை அது தொடர்பாக ஏன் உங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்

அதுமட்டுமல்லாமல் விளக்கு வேண்டுமா?  வேண்டாமா? அல்லது ஒளியின் பிரகாசம் அதிகரிக்க வேண்டுமா? உள்ளிட்டவற்றை சம்மந்தப்பட்ட அவர்களே முடிவு செய்யட்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் தொடர்ச்சியாக புதிய வடிவில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இது போன்ற வழக்குகளால்,  ஜனநாயக முறையில் வாக்காளர்கள் தங்களது பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது கேலிக்கூத்தாக மாற்றப்படுகிறது.  மேலும் இதற்கு சில பத்திரிகைகளில் சித்தரிக்கப்பட்ட செய்திகளும் வெளியிடப்படுகின்றன என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தார். 

மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன்,  ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளையும் ஒருமித்து 100% எண்ண வேண்டும்.  அதில் முரண்பாடுகள் இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டும்,  தீர்க்கப்பட வேண்டும்.  எனவே 100% ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்பதே தற்போது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  பல வெளிநாடுகள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து மாறி வாக்கு சீட்டு முறைக்கு மாறிவிட்டன,  அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மனுதாரர் தரப்பு தங்களது வாதங்களை முனவைத்தன.

வாக்கு சீட்டு முறையில் என்ன நடந்தது என்று எங்களுக்கும் தெரியும் என நீதிபதிகள் கூறி ஒப்புகை சீட்டுகளை 100% சரிபார்க்க கோரும் பொதுநல மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Tags :
ElectionElection2024Electronic MachineEVM Machinevoting machineVVPad
Advertisement
Next Article