Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“விடாமுயற்சி” திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியீடு!

08:28 PM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இன்று படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடிக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Tags :
ajithMagizh Thirumenisecond look posterTrishaVidaaMuyarchi
Advertisement
Next Article