Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

02:32 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், சென்னையில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (அக்டோபர் 16) சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ரேஸ் கோர்ஸ் நிலம் அரசின் வசம் வந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் குளம் அமைக்கும் பணி, நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து பள்ளிக்கரணை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாராயணபுரம் ஏரியில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

நாராயணபுரம் ஏரியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளும், ஜேசிபி மூலம் வண்டல் மண் கழிவுகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

“சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன. நீங்கள் மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம். கடந்த 3 மாதங்களாகவே மழை வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்து ஆட்சிக்கு வந்த போதே இதற்கான பணிகளில் இறங்கினோம். கொஞ்சம் கொஞ்சமாக பணிகளை செய்து வருகிறோம். ஒரேயடியாக எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஆனால் நிச்சயமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். முன்களப்பணியாளர்கள் அத்தனை பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
ChennaiChennai rainsHeavy rainNews7Tamilrain alertRain UpdateRain Updates With News7 TamilWeatherweather forecastWeather Update
Advertisement
Next Article