Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் ‘PERIYAR VISION’ ஆகத்தான் இருக்கும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

01:11 PM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் “PERIYAR VISION - (Everything for everyone)” ஆகத்தான் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

Advertisement

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளமான “PERIYAR VISION - (Everything for everyone)” தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, திரைப்பட நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஓடிடி தளத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

இதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, “தந்தை பெரியார் உலகளாவிய மானுடத் தலைவராக பார்க்கப்படுகிறார். அவரது வரலாறு, கொள்கைகள் என அனைத்தையும் கலை வடிவமாக கொண்டு செல்லும் திராவிட இயக்கத்திற்கு பாராட்டுக்கள். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூக ஊடகங்கள் பெருகி இருக்கக்கூடிய சூழலில் இளைஞர்களிடம் தந்தை பெரியாரின் கொள்ளைகளை எடுத்துரைக்க உருவாக்கப்பட்ட முதல் சமூகநீதி ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது.

கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் இதுவாக தான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
CMO TamilNaduDMKDravidar Kazhagamk veeramaniMK StalinNews7Tamilnews7TamilUpdatesottPeriyar Vision
Advertisement
Next Article