"மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரியகருப்பன், எம்பி துரை வைகோ, எம் எம் அப்துல்லா எம்பி, ஜோதிமணி எம் பி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் இந்த நான்காண்டுகாள ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய திட்டங்களை செய்யும்போது மக்களுக்கு கிடைப்பது இடையூறும் தடங்கல் ஏற்படுகிறது. அதனை களையும் வகையில் மக்களிடம் மனுக்களை பெற்று அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 8,9 மாதங்கள் தான் இருக்கக்கூடிய நிலையில் எஞ்சிய பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். பட்டா கேட்டு வருபவர்களை அளக்களிக்காமல் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். பட்டா வழங்கும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் அதிகாரிகள் பணிகளை செய்து அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பழங்குடியினர் இனத்தவர்களுக்கான 125 பேருக்கு வீட்டு மனை பட்டா, 50 பேருக்கு வீட்டு மனை பட்டா, 20 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா, ஆயிரம் பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 1195 பேருக்கு 40 கோடியே 54 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதவி ஸ்டாலின் வழங்கினார்.