Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்...

09:54 PM Nov 12, 2023 IST | Student Reporter
Advertisement

அனகாபுத்தூர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவளியை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர்
பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட  ஆக்கிரமிப்பு  வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அப்பகுதி பொதுமக்கள்  60 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் அங்கு  வசித்து வருவதாக  கூறுகின்றனர்.

இந்நிலையில் தீபாவளியான இன்று(நவ.12),  அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், 700 க்கும் மேற்பட்ட வீடுகளில்  கருப்பு கொடி ஏற்றினர்.   தங்கள் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து அறவழிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாடு அரசையும்,  தாம்பரம் மாநகராட்சியையும் கண்டிக்கும் வகையில்,  கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு முறையான மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிப்பதால், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags :
700 houses demolishedAnagaputhurChennaiignored DiwaliPeopleProtestthambaram
Advertisement
Next Article