வெள்ளத்தில் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள் - களத்தில் நியூஸ் 7 தமிழ்!
தென்மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நியூஸ் 7 தமிழின் செய்தியாளர்கள் குழு களத்திலிருந்து தொடர்ந்து செய்திகளை வழங்கி வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் குழு விரைந்துள்ளது. நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமார், பாண்டியன் ஆகியோர் நெல்லை-தூத்துக்குடி நெடுஞ்சாலை பகுதி மற்றும் தூத்துக்குடி பகுதியில் களத்திலிருந்து செய்திகளை வழங்கி வருகின்றனர்.
இதேபோல திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இருந்து செய்தியாளர் ஆல்வின் மற்றும் வள்ளி நாயகம் ஆகியோர் செய்திகளை வழங்கி வருகின்றனர். மேலும் நெல்லை டவுன் , பேட்டை , சுத்தமல்லி , கல்லூர், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் மண்டல செய்தியாளர் ரியாஸ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் களத்திலிருந்து செய்திகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, காயல்பட்டிணம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செய்தியாளர்கள் பிரசாந்த் மற்றும் ரமேஷ் ஆகியோரும், மீட்பு பணி குறித்த கள நிலவரங்களை செய்தியாளர்கள் அன்சர் அலி மற்றும் மணிகண்டன் ஆகியோரும் வழங்கி வருகின்றனர்.