Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் அல்ல ; அதனை ஒடிசா மக்கள்தான் முடிவு செய்வார்கள்" - நவீன் பட்நாயக்

08:10 PM Jun 08, 2024 IST | Web Editor
Advertisement

வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.  எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து நாளை பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் மோடி பதவி ஏற்க உரிமை கோரினார். அவரும் நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மத்தியில் மோடி 3.0 அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.  கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்ற பாஜக, இம்முறை பெறவில்லை.  எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.  இது மோடிக்கு புதிய அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரா,  ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலும் நடந்தது.  இதில் 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதளம் கட்சியை,  பாஜக வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது.  இதனிடையே பிஜூ ஜனதா தளம் கட்சி தோற்றதற்கு வி.கே.பாண்டியனே காரணம் என்று பலரும் கூறிவந்தனர்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த  ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்,  “வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது.  நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை.

எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள்.  கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக  செயலாற்றி உள்ளார்.  வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி.  கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது.  தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுகொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Tags :
Election2024Elections ResultsElections Results2024Elections2024Lok Sabha ElectionLok Sabha Election2024naveen patnaikodisha
Advertisement
Next Article