மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது.
இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.