ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கே.எல்.ராகுலுக்கு அபராதம்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்களும், கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். 177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே சார்பில் முஸ்தாஃபிசுர் மற்றும் பத்திரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோருக்கு தாமதமாக பந்து வீசியதால் இருவருக்கும் தலா ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.