பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது!
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சமகால எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் அருந்ததி ராய். இவர் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தந்தைக்கும் கேரளாவைச் சார்ந்த தாய்க்கும் மகளாக பிறந்தவர். இவரது பெற்றோர் இருவரும் மேகாலயாவில் உள்ள டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும்போது காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்களான மாவோயிஸ்ட்களை சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் காடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களது அரசியல், வாழ்வு மற்றும் நகர்வுகள் குறித்த “தோழர்களுடன் ஒரு பயணம்” எனும் பெயரில் புத்தகமாக எழுதி அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோா் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க டெல்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.
இது தொடர்பாக பெண் பிண்டர் விருதின் ஜூரிக்களில் ஒருவரான ருத் போர்த்விக் தெரிவித்ததாவது..
“ 2024 ஆம் ஆண்டிற்கான PEN பின்டர் பரிசை வென்ற அருந்ததி ராய்க்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அருந்ததி ராய் முக்கியமான கதைகளை புத்திசாலித்தனம் மற்றும் அழகுடன் கூறக் கூடிய எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில் அவரது சக்தி வாய்ந்த குரல் அமைதியாக இருக்கக்கூடாது,' என்று போர்த்விக் கூறினார்.