நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்ய தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்த நிலையில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தொடர் போராட்டத்தினால் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
இதனிடையே நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, நேற்று அவரது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம் சரண் பவ்டெல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார். நேபாளத்தில் கட்டுக்கடங்காத வன்முறை நீடித்து வரும் நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்பவுது முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நேபாளத்தில் அமைதி, ஸ்திரதன்மை, செழிப்பு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இளைஞர்கள் உயிரிழப்பது வேதனை அளிக்கிறது. இளம் வயதினர் பலர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. அமைதியை கடைபிடிக்குமாறு நேபாளத்தில் உள்ள
சகோதர சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.