Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

PBKSvDC: பஞ்சாபிற்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

05:47 PM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை டெல்லி அணி குவித்தது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி நேற்று (மார்ச் 22) தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதுகின்றன. சண்டிகரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் முதலில் களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ்  இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூன்றாவது ஓவரில் அர்ஷிப் சிங் பந்தில் மிட்செல் மார்ஷ் அவுட்டானர்.

தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக சாய் ஹோப் 33 ரன்கள் அடித்தார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்சல் படேலும், அர்ஷிதீப் சிங்கும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags :
#SportsCricketDCvsPBKSdelhi capitalsIPLIPL2024Punjab Kings
Advertisement
Next Article