Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#IPL2024 |  2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி!

07:01 AM Apr 10, 2024 IST | Web Editor
Advertisement

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 22 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.  இதையடுத்து 23 வது போட்டியில் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேற்று (ஏப்ரல் 09) மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.  அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து ராகுல் திரிபாதி 11 ரன்கள், ஹெய்ன்ரிச் கிளாசன் 9 ரன்கள், அப்துல் சமாது 25, ஷஹ்பாஸ் அஹமது 14, பேட் கம்மின்ஸ் 3, புவனேஸ்வர் குமார் 6, ஜெயதேவ் உனட்கட் 6 என மொத்தம் 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன்களை எடுத்தது.

இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.  தொடக்க வீரர்களாக ஷிகர் தவான்,  பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.  அந்த அணியில் பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமலும், பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களும், தவான் 14 ரன்களும் எடுத்து, ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய சாம் கரன் 29 ரன்களிலும், ஷிகந்தர் ராசா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து, ஷசாங் சிங் 25 பந்துகளில் 46 ரன்களும், அஷுதோஷ் சர்மா 12 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர்.  இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags :
CricketIPL2024PBKS vs SRHPunjab KingsSRH vs PBKSSunrisers Hyderabad
Advertisement
Next Article