பேடிஎம் UPI சேவை தொடரும்... வெளியான புதிய தகவல்...!
கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி, பயனர்களின் UPI சேவைகள் பேடிஎம் பேமெண்ட் வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தால் மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகு அவை நிறுத்தப்படும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பேடிஎம் வாடிக்கையாளர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சில வங்கிகளின் உதவியுடன் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராக UPI சேவைகளை தொடர்ந்து வழங்க One97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு தேசிய கொடுப்பனவு ஆணையம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பயனர்கள் மற்றும் வணிகர்கள் UPI பரிவர்த்தனைகளை எந்த இடையூறும் இல்லாமல் செய்ய முடியும்.
தற்போதைய ஒப்புதலின்படி, 4 வங்கிகள் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்துள்ளன. HDFC, ஆக்சிஸ், யெஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகளும் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும். இதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது.