Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

RBI நடவடிக்கையில் இருந்து தப்ப முயற்சி - ஸ்டார்ட்ஆப்பை வாங்கி புதிய பெயரில் வர பேடிஎம் திட்டம்!

03:16 PM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement

பேடிஎம் நிறுவனர் விஜர் சேகர் வர்மா ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிட்சிலாவை வாங்கியுள்ளதாகவும்,  பேடிஎம் என்ற பெயரை Pai பிளாட்ஃபார்ம்ஸ் என மாற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த ஒரு வாரமாகவே பேடிஎம் மீதான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.  பேடிஎம் சேவை பிப்ரவரி 29 ஆம் தேதி முடக்கப்படுகிறது என வெளியான தகவல் பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. பேடிஎம்மை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் பிரிவு 35A வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் கீழ் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்தும்,  அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாகவும்,  அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை நியமித்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.  அதன் தொடர்ச்சியாக,  தற்போது விதிகளுக்கு உட்படாதது,  நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கி முடக்கியதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜே.சுவாமிநாதன் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.  அதாவது, Paytm Payment Bank Limited (PPBL) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர,  பேடிஎம் மீது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.  அத்தகைய சூழ்நிலையில்,  இது பேடிஎம் செயலியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ONDC இன் விற்பனையாளர் தளமான Bitsila நிறுவனத்தை பேடிஎம் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் அதன் பெயரை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பேடிஎம் என்ற பெயரை Pai பிளாட்ஃபார்ம்ஸ் என மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Next Article