Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை - அலறி அடித்து ஓடிய நோயாளிகள்!

12:16 PM Dec 13, 2023 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிராவில்,  மருத்துவமனைக்குள்  புகுந்த சிறுத்தையால் நோயாளிகள் பதறியடித்து ஓடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம்,  நந்தூர்பார் மாவட்டம் ஷஹாதா பகுதியில் ஆதித்யா மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் நேற்று (டிச.12) காலை மருத்துவ வளாகத்திற்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை பார்த்துள்ளார்.  உடனடியாக ஊழியர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,  நோயாளிகள்,  உறவினர்கள்,  மருத்துவர்கள் அனைவரும்  மருத்துவமனையை விட்டு வெளியேறி அனைத்து கதவுகளையும் அடைத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக பிடித்து வனப் பகுதிக்குள் விட்டனர்.  இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், திங்கள்கிழமை இரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்திருக்க கூடும்  எனத் தெரிவித்தனர்.

Tags :
Aditya Maternity and Eye HospitalleopardMaharashtraNandurbarNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article