Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உச்சநீதிமன்றத்தில் கைகூப்பி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்!

01:28 PM Apr 16, 2024 IST | Web Editor
Advertisement
தடை உத்தரவை மீறி பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் கைகூப்பி மன்னிப்பு கேட்டார்.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு,  எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில்,  இந்த  நிறுவனம் பல தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி  வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று எச்சரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  இதனிடையே,  இந்த விவகாரத்தில் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தாயார் என தெரிவித்ததை உச்சநீதிமன்றம் கடந்தமுறை நிராகரித்திருந்தது.

Advertisement

இந்த நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  நீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாகி பால கிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றத்திற்காக கைகூப்பி மன்னிப்பு கேட்டனர்.

மேலும் ஊடகங்களில் தங்கள் நடத்தைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.  இந்த வழக்கை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து,  அன்றைய தினம் பாபா ராம்தேவ் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Acharya Balakrishnababa ramdevPatanjaliPatanjali Advertising CaseSupreme court
Advertisement
Next Article