Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜன.24ம் தேதிக்கு முன்பு 'படைத் தலைவன்' வெளியிடப்படாது - உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !

'படைத் தலைவன்' திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்பு வெளியிடப்படாது என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
05:19 PM Jan 11, 2025 IST | Web Editor
Advertisement

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது 'படைத்தலைவன்' என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் நிலையில் படத்தை இயக்குநர் அன்பு இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

Advertisement

கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஸ்மார்ட் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், நடிகர்கள் சண்முக பாண்டியன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படைத் தலைவன் படத்தின் வெளிநாட்டு உரிமையை படத் தயாரிப்பு நிறுவனம் தனக்கு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. மொத்த தொகையாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆன நிலையில் முன் பணமாக 45 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும், இசை வெளியீட்டு விழாவின் போது மீதமுள்ள தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்படாததால், மீதமுள்ள தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் அன்று படம் வெளியாகும் என்ற விளம்பரம் வெளியிடப் பட்டுள்ளதாகவும், முன்பணமாக கொடுத்த 45 லட்சம் ரூபாயை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன், ஒப்பந்தப்படி வெளிநாட்டு உரிமை தங்களுக்கு வழங்குவதாக இருந்தால் மீதத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாக கூறினார். படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்தரன், படம் ஜனவரி 24ம் தேதி வெளியிடப்படாது எனவும் 45 லட்சம் ரூபாயை திரும்ப அளிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கருத்து பெற்று தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் சண்முகப் பாண்டியன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்திற்கு தொடர்பில்லாத தன்னை வழக்கில் இணைத்துள்ளதாகவும், கடைசி நேரத்தில் தடைக்கோரி இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக படம் வெளியிடப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags :
'Patai Thalaivan'chennai High CourtcompanyFilmProduction
Advertisement
Next Article