Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயணிகளை ஏற்றி, இறக்கும் விவகாரம்: ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!

04:08 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இருந்து தெற்கு நோக்கி புறப்படும் பேருந்துகள் அனைத்தும் போரூர், சூரப்பட்டு அல்லது கிளாம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிப்.09-ம் தேதி இட்ட இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கடந்த பிப்.13 அன்று வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்தும், கடந்த ஜன.22 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது.  இதனை மீறி வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் எக்காரணம் கொண்டும் மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், Red Bus, Abhi Bus உள்ளிட்ட செயலிகளிலும் பதிவிடக்கூடாது.  அவ்வாறு பதிவு செய்தால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் எச்சரிக்கப்படுகிறது.

இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
KilambakkamKilambakkam Bus Standomni busOmni Bus OwnersTraffic Commissioner
Advertisement
Next Article