"நான் விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதை பொறுக்காமல் விமர்சிக்கின்றனர்" - #PMModi
நான் விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதை பொறுக்காமல் விமர்சிக்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இந்த சூழலில், ஒடிசாவில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக தலைநகர் புவனேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது,
"விநாயகர் சதுர்த்தி என்பது நம்பிக்கைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல. சுதந்திர போராட்டத்தின்போது, விநாயகர் சதுர்த்தி மூலமாக இந்திய குடிமக்களை ஒன்றிணைத்தனர். இன்றும் பல சமூக மக்களை ஒருங்கிணைக்கும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி உள்ளது. அந்தக் காலத்தில் பிரித்தாளும் கொள்கையில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் விநாயகர் பூஜையை வெறுத்தனர்.
அதேபோல், இன்றும் இந்த சமூகத்தைப் பிரித்து உடைப்பதில் மும்முரமாக இருப்பவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நான் விநாயகர் பூஜையில் கலந்துக்கொண்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோபத்தில் உள்ளனர். நான் பூஜையில் பங்கேற்றது பொறுக்காமல் விமர்சிக்கின்றனர்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.