நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமடங்களிலேயே எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோடி!
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதும், உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது இதன்பின் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். இதனால், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.