Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் | நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு...!

04:03 PM Jan 27, 2024 IST | Jeni
Advertisement

திருநெல்வேலி தொகுதியில் பா.சத்யா, தென்காசி தொகுதியில் மயிலராஜன் ஆகியோர் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

முன்னதாக, தென்சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article