Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தேர்தல் பத்திரத்துக்கான மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்" - அமித்ஷா பேட்டி!

07:16 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் பத்திரத்துக்கு மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேர்காணலில் பங்கேற்று பேசினார். தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் மக்களவைத் தேர்தலில் கருப்புப் பணத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்று நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தழுவி இந்தியில் உருவாகிறது "தடக் 2"

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

"தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால், மக்களவைத் தேர்தலில் கருப்பு பணத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கை சமர்ப்பிக்கும்போது, ரொக்க நன்கொடை எவ்வளவு, காசோலை மூலம் பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு என்பது தெரிய வரும்.

தேர்தல் பத்திரம் நடைமுறையில் இருக்கும்போது 96 சதவிகிதம் நன்கொடை காசோலை மூலம் தான் பெறப்பட்டது. கருப்புப் பணத்தின் தாக்கம் அதிகரித்தால், அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
amit shahelection paperElection2024Elections2024interviewparliament
Advertisement
Next Article