Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற கூட்டத் தொடர் - குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!

06:46 AM Jan 31, 2024 IST | Web Editor
Advertisement

நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

Advertisement

மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  அனைத்து அரசியல் கட்சிகளும்  மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்  ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த கூட்டத் தொடர் தற்போதைய 17-வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடராகும். மேலும் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனவரி 31-ந் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரைக்கு பின்னர் கூட்டத்தொடர் தொடங்கும்.  இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.  இக்கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது உள்ளிட்ட முக்கியமான விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கே.சுரேஷ், பிரமோத் திவாரி, திமுகவின் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய், சமாஜ்வாதியின் எஸ்.டி.ஹாசன், ஐக்கிய ஜனதா தளத்தின் ராம்நாத் தாக்குர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேசம் கட்சியின் ஜெயதேவ் கல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனைத்து கட்சி கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசியதாவது..


“ பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம், அதற்கு பிரதமர் மோடியின் பதில் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும். சட்டமியற்றுதல் தொடர்பான நடைமுறைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை. அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக அமைந்தது. ஒவ்வொரு பிரச்னை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது' என தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.

Tags :
2024 Budejetinterim budgetparlimentPrahalad JoshiPresident of Indiaunion govt
Advertisement
Next Article