Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

5 மொழிகளில் ரீமேக் செய்யப்படும் ‘பார்க்கிங்’..!

09:45 AM May 21, 2024 IST | Web Editor
Advertisement

‘பார்க்கிங்’ திரைப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில்,  ஹரிஷ் கல்யாண்,  இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’.  இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,  பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்,  எம்எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.  சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றது.   மேலும், இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில்,   இப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதன்படி ஒரு வெளிநாட்டு மொழி மற்றும் நான்கு இந்திய மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் ஆகிறதாம்.

Tags :
#Indhujaharish kalyanParkingremake
Advertisement
Next Article