களக்காடு நடுச்சாலைப்புதூர் ஆதி நாராயணசாமி கோவிலில் பரிவேட்டை விழா! - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
களக்காடு அருகே நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயணசுவாமி கோயிலில் ஆனி திருவிழாவை முன்னிட்டு பரிவேட்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த
ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில்
ஆண்டு தோறும் ஆனி மாதம் தேரோட்டத் திருவிழா 11 நாட்களுக்கு வெகு விமரிசையாக
நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 5ம் தேதி
திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவிழாவின் 8ம் நாளான நேற்று 12ம் தேதி பரிவேட்டை விழா கோலாகலத்துடன் நடைபெற்றது. இதையடுத்து அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள் : “விரைவில் வெளியாகிறது ‘தங்கலான்’ திரைப்படத்திடன் ஃபர்ஸ்ட் சிங்கிள்” – ஜிவி பிரகாஷ் அறிவிப்பு!
பின்னர், இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோயிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே வந்ததும், இரவு 10:30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி கிணற்றை சுற்றி வந்து பரிவேட்டையாடினார். இதன் அடையாளமாக அம்பு எய்தினார்.
தொடர்ந்து அய்யா நாராயண சுவாமி திருவீதி உலாவாக கோயிலுக்குள் எழுந்தருளினார். அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் களக்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 11ம் நாளான வரும்15ம் தேதி
தேரோட்டம் நடைபெற உள்ளது.