#ParisParalympics - இந்தியாவிற்கு 5வது பதக்கம்... வெண்கலம் வென்றார் ரூபினா பிரான்சிஸ்!
பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்.8ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. பாராலிம்பிக்ஸில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா பெற்ற நான்காவது பதக்கமாகும். இந்த பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஒட்டுமொத்தமாக இந்தியா பெற்ற ஐந்தாவது பதக்கமாகும். அவனி லேகாரா, மோனா அகர்வால், மனிஷ் நர்வால் வரிசையில் துப்பாக்கி சுடுதலில் நான்காவது பதக்கத்தை ரூபினா பிரான்சிஸ் வென்றுள்ளார்.