பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் - தங்கம் வென்றார் ஜோகோவிச்!
பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றார்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) பலபரீட்சை நடத்தினர். போட்டியின் தொடக்கம் முதல் இருவரும் மாற்றி மாற்றி புள்ளிகளை குவிக்க தொடங்கினர். இதனால், போட்டியில் விறுவிறுப்பு தொற்றியது.