பாரிஸ் ஒலிம்பிக் : ஒரே கிலோவில் பறிபோன பதக்கம் - 4வது இடம்பிடித்தார் மீராபாய் சானு!
பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் 4வது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்தியாவின் மீராபாய் சானு பதக்கத்தைத் தவறவிட்டார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை.
இதையும் படியுங்கள் : அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த விமர்சனம் – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்!
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார். அவர், ஸ்ட்ரச் பிரிவில் 88 கிலோ கிளீன் அண்ட் ஜர்க் பிரிவில் 111 புள்ளிகள் என மொத்தம் 199 புள்ளிகள் பிடித்து 4ம் இடம் பிடித்தார். 114 கிலோவை தூக்கும் இறுதி முயற்சியில் மீராபாய் சானு தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார். இதே சுற்றில் பங்கேற்ற தாய்லாந்து வீராங்கனை மீராபாய் சானுவை விட ஒரு கிலோ(200 புள்ளிகள்) அதிகமாக பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஒரு கிலோ வித்தியாசத்தில் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை இழந்தார்.