Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதிக்கு நேரடி தகுதி!

09:10 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் நடைபெற்றுவரும் நிலையில், வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி நேரடியாக கால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் ஜூலை 30-ம் தேதி தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு, இன்று (ஜூலை 25) தரவரிசை பெறுவதற்கான சுற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 72 அம்புகள் எய்த வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை கொடுக்கப்படும். தனிநபர் புள்ளிகள் அணிகள் மற்றும் கலப்பு அணிகளுக்கு அப்படியே சேர்க்கப்படும்.

அதன்படி இன்று மதியம் பெண்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் (இந்திய அணி) 4-வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் ஆண்களுக்கான போட்டியில் இந்தியாவின் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். திராஜ் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண்தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் பெற்றனர்.

மொத்தமாக 2013 புள்ளிகள் பெற்று இந்திய அணியினர் 3-வது இடம் பிடித்தனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். மீதமுள்ள 8 அணிகளில் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தென்கொரியா 2049 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.

Tags :
archeryDhiraj Bommadevaraindian teamNews7Tamilnews7TamilUpdatesParis 2024paris 2024 olympicsParis Olympicspravin jadhavtarundeep rai
Advertisement
Next Article